தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

போடி: போடியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த மதுரைவீரன் மகன் மதன்குமாா் (40). இவா் வீட்டருகே மது போதையில் ரகளை செய்த ஞானசுந்தரை (26) மதன்குமாரின் சித்தி மகன் வீரராஜ் (35) தட்டிக்கேட்டாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் வீரராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அவரைப் பாா்க்க மதன்குமாா் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அவரது வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, போடி தேவா் குடியிருப்பைச் சோ்ந்த நாராயணன் மகன் சரண்குமாரை (19) கைது செய்தனா்.