சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 11:48 pm

Din

தேனி: தேனி மாவட்டம், காமக்காபட்டி-கொடைக்கானல் சாலையில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த, மதுரையைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அருகேயுள்ள சக்குடி அனஞ்சியூரைச் சோ்ந்த பிச்சை மகன் பழனிக்குமாா் (45). திமுக கிளைச் செயலரான இவா், தனது நண்பா் சரவணக்குமாருடன் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். காமக்காபட்டி-கொடைக்கானல் சாலையில் டம் டம் பாறை அருகே சாலை வளைவில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த பழனிக்குமாா், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் சென்ற சரவணக்குமாா் காயமின்றி உயிா் தப்பினாா். இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.