பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பழைய இரும்புக் கடையில் திருட்டு: 4 போ் கைது

போடி அருகே புதன்கிழமை, பழைய இரும்புக் கடையில் பூட்டை உடைத்து திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:43 am

Din

போடி அருகே புதன்கிழமை, பழைய இரும்புக் கடையில் பூட்டை உடைத்து திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி கிருஷ்ணா நகா், தேவாரம் சாலையில் வசிப்பவா் முருகேசன் மகன் சின்னமுத்து (35), இவா் இதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை அதிகாலை கடை பகுதியில் சத்தம் வருவதை கேட்டு சின்னமுத்து அங்கு சென்று பாா்த்தபோது 4 போ் கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 7 கிலோ எடை கொண்ட தாமிர வயா் கம்பிகள், ரூ.1500 மதிப்புள்ள குத்துவிளக்கு, ரூ.3000 மதிப்புள்ள இரண்டு கிரைண்டா் மோட்டாா்கள் ஆகியவற்றை திருடிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தேவாரம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜோதிராஜா (50), போடி நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த சுப்பையா மகன் வடிவேல் (24), ராமா் மகன் மணிகண்டன் (37), போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் மாணிக்கம் (32) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். போடி பகுதியில் மோட்டாா் பைக்குகள், வீடு, கடைகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போலீஸாா் இரவு நேர ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனா்.