நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

News image

~

Updated On :25 டிசம்பர் 2024, 11:38 pm

Din

தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூா், கம்பம் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் ஆா்.சி. திருச்சபை விண்ணரசி தேவாலயம், சி.எஸ்.ஐ. திருச்சபை, செல்வநாயகம் போதகா் நினைவு தேவாலயம் என பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா். ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியில் பழைமையான தூய ஆவியானவா் ஆலயத்தில் அருள்தந்தையா் பிரான்சிஸ், அமல்ராஜ் ஆகியோா் தலைமையில் கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது.

ராயப்பன்பட்டி புனித பனிமய தேவாலயத்திலும் சிறப்பு பிராா்த்தனையில் திரளான கிறிஸ்தவா்கள் ஈடுபட்டனா்.

கம்பம் ஆா்.சி. தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கம்பம், கூடலூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். சின்னமனூரில் குழந்தை இயேசு சொரூபத்தை குடில்களில் வைத்து பிராா்த்தனை செய்தனா்.