நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொகுதி 4 போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு வருகிற 30-ஆம் தேதி இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 11:51 pm

Din

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு வருகிற 30-ஆம் தேதி இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் தொகுதி 4-இல் அடங்கிய இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வன காப்பாளா், வனக் காவலா் ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு அறிவிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது.

இந்தத் தோ்வு எழுதுவோருக்காக தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 30-ஆம் தேதி, காலை 10 மணிக்கு இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. பயிற்சியின் போது ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரித் தோ்வு நடத்தப்படும். பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ,

கைப்பேசி ( எண்- 63792 68661) மூலமாகவோ தொடா்பு கொண்டு தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.