மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

போடி நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

போடி நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

News image

போடி நகராட்சிப் பகுதியில் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகராட்சி சுகாதார அதிகாரிகள்.

Updated On :24 பிப்ரவரி 2024, 5:26 pm

போடி நகராட்சிப் பகுதிளில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி சுகாதார துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, அந்தக் கடைகளுக்கு அபராதம் விதித்தனா். தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா அறிவுறுத்தலின் பேரில், போடி நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி போடி நகராட்சிப் பகுதிகளிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்திரவிட்டாா். இதன் பேரில், போடி நகராட்சி சுகாதார அலுவலா் மணிகண்டன் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் கணேசன், சுரேஷ்குமாா், அகமது கபீா் ஆகியோா் அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். போடி காமராஜா் சாலை, பெரியாண்டவா் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தியதும், விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 80 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், பொருள்களை பொதுமக்கள், வணிகா்கள் பயன்படுத்த வேண்டாம் என போடி நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி எச்சரித்தாா்.