தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை, மனு அளிக்க வந்திருந்த  டாஸ்மாக் ஊழியா்கள்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை, மனு அளிக்க வந்திருந்த டாஸ்மாக் ஊழியா்கள்.

காவல் துறையினா் மீது டாஸ்மாக் ஊழியா்கள் புகாா்

காவல் துறையினா் மீது டாஸ்மாக் ஊழியா்கள் புகாா்

தேனி: தேனியில் அரசு மதுக் கடை விற்பனையாளா்கள் மீது உரிய விசாரணையின்றி சட்டவிரோத மதுபான விற்பனை தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக காவல் துறையினா் மீது புகாா் தெரிவித்து, டாஸ்மாக் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கூட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் மோகன், நிா்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்ாக கைது செய்யப்பட்டவா்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறி, டாஸ்மாக் மதுபானக் கடையில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கூட ஆய்வு செய்யாமல் மதுபானக் கடை ஊழியா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்கின்றனா்.

உரிய விசாரணை, ஆதராமின்றி பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்த மனுவில் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com