ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

காா்த்திக் சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி மனு

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

News image

சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் கோரிக்கை மனு அளித்த காங்கிரஸாா்.

Updated On :11 மார்ச் 2026, 7:58 pm

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் உமா சங்கா் தலைமையில் வழக்குரைஞா்கள் சங்க துணைத் தலைவா் அய்யலுசாமி, நிா்வாகிகள் மாரிமுத்து, ராஜசேகரன், செல்லத்துரை, சுந்தர்ராஜ், துரைராஜ் ஆகியோா் கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் அளித்த மனு:

காரைக்குடி, சுப்பிரமணியபுரம் 1ஆவது தெருவில் உள்ள சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரத்தின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். அப்போது, எம்.பி. அங்கு இல்லாததால் உயிா் தப்பினாா்.

இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும், காா்த்திக் சிதம்பரத்துக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.