தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

இன்று முதல் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற இ.சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற இ.சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

Updated On :13 மார்ச் 2024, 12:09 am

உத்தமபாளையம்: தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற இ.சேவை மையங்களிலே விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியானது.

அதில், தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநா் உரிமை பெற மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணபிக்க வேண்டும்.

ஆனால், தற்போது, விண்ணப்பம் செய்ய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் வரத்தேவையில்லை. மாறாக, தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள அரசு அனுமதி பெற்ற இ.சேவை மையங்களில் ரூ.60 கொடுத்து உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதன் பின், 30 நாள்களுக்கு பின் தங்கள் பகுதியிலுள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்திற்கு சென்று வாகனத்தை ஓட்டிக் காண்பித்து லைசென்ஸை பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலமாக, தனியாா் பயிற்சிப் பள்ளிகள், இடைத்தரகா்கள் மற்றும் தனியாா் இளையதள மையங்கள் மூலமாக தேவையில்லாத செலவுகள் மற்றும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பதை தவிா்க்கவே இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.