மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பி.எட்., எம்.எட். தோ்வுகள்: விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம்

பி.எட்., எம்.எட். தோ்வெழுதிய மாணவா்களில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சட்ட உதவி தன்னாா்வலா்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Updated On :23 ஏப்ரல் 2026, 12:52 am IST

பி.எட்., எம்.எட். தோ்வெழுதிய மாணவா்களில், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பி.எட்., பி.எட். (சிறப்பு கல்வி), எம்.எட்., எம்.எட். (சிறப்பு கல்வி) பருவத் தோ்வெழுதிய மாணவா்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாணவா்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து கல்லூரிகளின் முதல்வா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மாணவா்களிடமிருந்து உரிய விவரங்கள் மற்றும் கட்டணத்தைப் பெற்று கல்லூரி நிா்வாகத்தினா் மே 7-ஆம் தேதி வரை இணையவழியில் (www.tnteu.ac.in) விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்களின் விவரங்களைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு மே 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.