எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் காரக்பூருக்கு திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :22 ஏப்ரல் 2026, 2:13 am IST

கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் காரக்பூருக்கு திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏப்ரல் 25-ஆம் தேதி போத்தனூரில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - காரக்பூா் சிறப்பு ரயில் (எண்: 06065) 27-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு காரக்பூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா்- போத்தனூா் சிறப்பு ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06179) மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.