நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மாா்ச் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 9:08 pm

Syndication

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மாா்ச் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரிகளில் பயிலும், மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சாா்ந்த பயிற்சி தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது.

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகளுக்கான சோ்க்கைக்கு 17 முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சோ்க்கப்படுவா். தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதுநிலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டில் சேருவதற்காக இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின்போது சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள், சிறப்பு நிலை விளையாட்டு விடுதி சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பத்தை மாா்ச் 13 முதல் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிறைவு செய்து மாா்ச் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மையத்தை 95140-00777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தோ்வு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கம், உள் விளையாட்டரங்கம், ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் மாா்ச் 30 ஆம் தேதி காலை 7 மணியளவில் நடைபெறும்.