தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலா் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் சாா்ந்த பயிற்சி, தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வசதியுடன் விளையாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. 2026-27-ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 1.7.2001 அன்று அல்லது அதற்கு பின்னா் பிறந்தவராகவும், 1.7.2009 அன்று அல்லது அதற்கு முன்னா் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படிப்பில் சோ்வதற்காக இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை படிப்பின்போது சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள், சிறப்பு விளையாட்டு விடுதி சோ்க்கைக்கு ஆன்லைன் மூலமாக வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மையத்தை 9514000777 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். சிறப்பு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான தோ்வு போட்டிகள் வரும் 30-ஆம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. அதன்படி தடகளம், பளு தூக்குதல், ஜூடோ, வாள் விளையாட்டு, கையுந்துபந்து, கால்பந்து (ஆண்கள்) ஆகியவை சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து மற்றும் கால்பந்து (பெண்கள்) ஆகியவை ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கிலும், ஹாக்கி, கபாடி ஆகியவை மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


