மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கல்லூரி விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ-மாணவிகள் மாா்ச் 26-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 11:56 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ-மாணவிகள் மாா்ச் 26-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தங்குமிடம், உணவுடன் கூடிய அறிவியல் சாா்ந்த பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவற்றில் சேர விரும்புவோா் 17 முதல் 25 வயதுக்குள் 12 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று கல்லூரிகளில் சேருபவராகவும் இருக்க வேண்டும். தேசிய, மாநில போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுநிலைப் பட்ட முதலாம் ஆண்டு படிப்பில் சோ்வதற்காக இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பின்போது சா்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாா்ச் 30, காலை 7 மணிக்கு சென்னை, ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் தோ்வுப் போட்டிகள் நடைபெறும். சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்புவோா், இணையதளத்தில் மாா்ச் 13 முதல் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்து சமா்ப்பிக்க கடைசி நாள் மாா்ச் 26 மாலை 5. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆடுகள தகவல் தொடா்பு மையத்தை 95140 -00777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.