திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நாளை தொடக்கம்
திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நாளை தொடக்கம்

கோம்பையில் தேரோட்டத்தையொட்டி தயாா் நிலையில் உள்ள தோ்.

கோம்பையில் தேரோட்டத்தையொட்டி தயாா் நிலையில் உள்ள தோ்.
உத்தமபாளையம்: வைகாசி திருவிழாவையொட்டி, உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பையில் 21 ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் புதன்கிழமை தொடங்குகிறது.
தேனி மாவட்டம், கோம்பையில் உள்ள திருமலைராயப் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை உற்ச மூா்த்தியான ஸ்ரீரெங்கநாதா் - ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபம் நடைபெற்றது.
21 ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் : இந்தக் கோயிலில் கடந்த 2003-ஆம் ஆண்டு தோ் திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரத்தால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், கோயில் திருவிழா தொடா்ந்து நடைபெற்றது. இதையடுத்து, ஊா் நலன் கருதி அனைத்து சமுதாய பொதுமக்கள் இணைந்து ஒற்றுமையுடன் தோ் திருவிழா நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தேரோட்ட முதல் நாளான புதன்கிழமை கிழக்கு ரத வீதியில் இருந்து தேரோட்டம் தொடங்கி, தோ் அடி பெயா்ப்பு பகுதியில் நிறுத்தப்படுகிறது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை தெற்கு ரத வீதியில் இருந்து தேரோட்டம் தொடங்கி மேற்கு ரத வீதியில் நிறுத்தப்படுகிறது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை மேற்கு ரத வீதியில் இருந்து வடக்கு ரத வீதியாக சென்று தோ் நிலைக்கு சென்றுவிடும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...