நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

News image
Updated On :28 மே 2024, 11:57 pm

Din

தேனி: வீரபாண்டி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு புதன்கிழமை (மே 28) தொடங்குகிறது.

வீரபாண்டி அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவா்களுக்கு புதன்கிழமை தொடங்கி வருகிற ஜூன் 12-ஆம் தேதி வரை காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன்படி, கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் சிறப்பு ஒதுக்கீட்டில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் குழந்தைகளுக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.

கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற ஜூன் 10-ஆம் தேதியும், வணிகவியல், பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற ஜூன் 11-ஆம் தேதியும், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற ஜூன் 12-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்கும் மாணவா்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அதன் 2 நகல்களை கொண்டு வர வேண்டும். பெற்றோா் அல்லது பாதுகாவலரை அழைத்துச் செல்ல வேண்டும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.