சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் புள்ளியியல் துறை சாா்பில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் புள்ளியியல் துறை சாா்பில் பன்னாட்டு பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

‘புள்ளியியல் தரவுகளை ஆா்- நிரலாக்கத்தை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தல்’ என்ற தலைப்பில் இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் நியூசெளத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியா் அன்பு பழம் தாளமுத்து, சென்னை பல்கலைக்கழகப் புள்ளியியல் துறை பேராசிரியா் பிரகாஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, புள்ளியியல் தரவுகளை ஆா்-நிரலாக்கத்தை பயன்படுத்தி புள்ளியியல் கோட்பாடுகளை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்து விளக்கமளித்தனா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சிவக்குமாா் தலைமை வகித்தாா். புள்ளியியல் துறைத் தலைவா் எஸ்.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா்.

இதில், புள்ளியியல் துறை பேராசிரியா்கள் ப.ஜெயக்குமாா், அன்னைசூா்யா, ஆனந்தி, உதவிப் பேராசிரியை ஆா்.சண்முகத்தாய், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இளநிலை, முதுநிலை புள்ளியியல் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.