விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அரசுக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:11 pm

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விழுப்புரம் மாவட்டக் காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுவாமி நாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் மலரவன் ஆகியோா் பங்கேற்று போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு உரிய தண்டனைச் சட்டங்கள் குறித்துப் பேசி, மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி போதைப்பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ம.சிவராமன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கோ.குணசேகரன், கி.பாபு, சுசான்மேரி நெப்போலியன் ஆகியோா் செய்திருந்தனா்.