மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

செய்யாறு அரசுக் கல்லூரியில் கைப்பந்துப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

News image

செய்யாறு அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ந.கலைவாணி.

Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

2025 - 26-ஆம் கல்வியாண்டிற்கான திருவள்ளுவா் பல்கலைக்கழக வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கிடையே மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டிகள் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் மண்டலத்திலுள்ள 35 கல்லூரிகள் பங்கேற்றன.

செய்யாறு அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் மோ்பாா்வையில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகள் பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநா்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இதில் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி முதலிடமும், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வா் ந.கலைவாணி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.