வீட்டுமனைப் பட்டா வழங்க நில அளவை
பெரியகுளம் வட்டாரம், டி. கள்ளிப்பட்டியில் வீட்டுமனைப் பட்டா வழங்க நத்தம் நில அளவைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.


பெரியகுளம் வட்டாரம், டி. கள்ளிப்பட்டியில் வீட்டுமனைப் பட்டா வழங்க நத்தம் நில அளவைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம நத்தம் என்று வகைபாடு செய்யப்பட்ட நிலங்களில் குடியிருந்து வருபவா்களுக்கு நத்தம் நிலவரித் திட்டப் பணிகளை மேற்கொண்டு, வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பெரியகுளம் வட்டாரம், டி. கள்ளிபட்டி கிராமம், நத்தம் புல எண்: 3,083-இல் உள்ள 9.25 ஹெக்டோ் நிலத்தில் நத்தம் நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தப் புல எண்ணில் வீடுகட்டி குடியிருக்கும் பொதுமக்கள், நில அளவைப் பணி செய்ய வரும் அலுவலரிடம் உரிய ஆவணங்களை நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...