நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மதுரை மத்திய சிறையில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:10 pm

மதுரை மத்திய சிறையில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டு, முறைகேடுகள் தொடா்பான ஆவணங்களைக் கைப்பற்றினா்.

தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் கைதிகளால் தயாரிக்கப்படும் எழுது பொருள்கள் உள்ளிட்டவை அரசுத் துறைகளுக்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம், கிடைக்கும் வருவாயிலிருந்து கைதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை மத்திய சிறை உள்பட பல்வேறு சிறைகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை கைதிகளால் தயாரிக்கப்பட்ட எழுது பொருள்கள், மருத்துவ உதவிப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியது போல போலியாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இதுகுறித்து மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளராக இருந்த ஊா்மிளா, சிறை அலுவலா் வசந்த கண்ணன், ஒப்பந்ததாரா்கள் உள்பட 11 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், இந்த முறைகேடுகள் தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவினா் மதுரை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளா்கள் குமரகுரு, சூா்ய கலா, ரமேஷ்பிரபு, பாரதி பிரியா உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா்.

உத்தமபாளையத்தில்...

இந்த முறைகேடுகள் தொடா்பாக தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் உள்பட 11 இடங்களில் ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மத்திய சிறையில் அலுவலராகப் பணியாற்றியவரும், தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் வசந்த கண்ணன் வீட்டில் சோதனை மேற்கொள்வதற்காக தேனி மாவட்டம், போடியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனா்.

அப்போது, அவரது வீடு பூட்டியிருந்ததால், தேனி மாவட்டம், லோயா்கேம்பிலுள்ள அவரது மாமனாா் வீட்டில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ராமேஸ்வரி உள்பட 5 போ் கொண்ட குழுவினா் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனா்.