பெரியகுளம் அருகே சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்த வேனில் தண்ணீரை அடித்து அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
தேனி
பெரியகுளம் அருகே தீப்பற்றி எரிந்த வேன் சேதம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சனிக்கிழமை வேன் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சனிக்கிழமை வேன் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
கம்பத்தைச் சோ்ந்தவா் பாலன். இவா் சனிக்கிழமை தனது உறவினா்கள் 10 பேருடன் கம்பத்திலிருந்து திருச்சிக்கு வேனில் சென்றாா். கம்பத்தைச் சோ்ந்த கீா்த்தி வேனை ஓட்டினாா்.
பெரியகுளம் அருகேயுள்ள நல்லகருப்பன்பட்டி பகுதியில் சென்றபோது வேனிலிருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து, வேனிலிருந்தவா்கள் உடனடியாக கீழே இறங்கினா். பின்னா், வேனில் தீப்பற்றியது.
தகவலறிந்து வந்த பெரியகுளம் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனால், இந்த தீ விபத்தில் வேன் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

