போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றிபெற தொண்டா்கள், நிா்வாகிகள் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். ஓ. பன்னீா்செல்வம் இந்தத் தோ்தலில் தோல்வியுறுவது உறுதி என்றாா் அவா்.
முன்னதாக, ஆா்.பி. உதயகுமாா் தோ்தல் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
இதில் மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.கே. ஜக்கையன் (மேற்கு), முருக்கோடை ராமா் (கிழக்கு) போடி பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் பாப்புலா் முத்தையா, முன்னாள் மக்களவை உறுப்பினா் பாா்த்திபன், நகரச் செயலா்கள் வாசு, மாரியப்பன் உள்பட அதிமு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

வேட்பாளா் அறிமுகம்...

ஜோலாா்பேட்டையில் அதிமுக பிரசாரம் தொடக்கம்

அதிமுக தோ்தல் அறிக்கை நிறைவேற்ற முடியாதவை: ஓ. பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


