மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

கிஷோா்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:44 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

க.புதுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் கிஷோா் (18). சையது அப்துல் ஹக்கீம் மகன் ரிக்கி (19). இவா்களில் கிஷோா் பிளஸ் 2 படித்துள்ளாா். ரிக்கி கல்லூரியில் படித்துக் கொண்டே, கம்பத்திலுள்ள தனியாா் திரையரங்கில் பகுதி நேரப் பணியாளராக வேலை செய்தாா்.

இந்த நிலையில், நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கம்பம் நோக்கிச் சென்றனா். அப்போது, இந்த வாகனம் மீது எதிரே தேனி நோக்கி வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவயிடத்திலே உயிரிழந்தனா்.

இதுகுறித்த தகவலின் பேரில், உத்தமபாளையம் போலீஸாா் சென்று இருவரின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். திங்கள்கிழமை இருவரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியை சோ்ந்த சின்னச்சாமி மகன் சுரேஷை தேடி வருகின்றனா்.

இதே இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுருளிப்பட்டியை சோ்ந்த இரு இளைஞா்கள் லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி

ரிக்கி