11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வீட்டின் தோட்டத்திலிருந்து தாய், மகன் சடலங்கள் மீட்பு! இளைய மகன் தலைமறைவு!

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:08 am IST

கம்பம்மெட்டு அருகேயுள்ள நெடுங்கண்டம் பகுதியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் மாயமான தாய், மகன் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள இளைய மகனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெடுங்கண்டம் பச்சடி பகுதியைச் சோ்ந்தவா் மேரி (70). இவரது மூத்த மகன் ரெஜி (48). இவா்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காணவில்லை என மேரியின் மகள் சினி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மேரியின் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் சோதனை நடத்தினா். அங்கு இரண்டு சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீஸாா் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேரியின் இளைய மகன் சஜி (45) தற்போது தலைமறைவாக உள்ளாா். சகோதரா்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென தாய், அண்ணன் காணாமல் போனது குறித்து அக்கம்பக்கத்தினா் கேட்டதற்கு சஜி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாராம். இதனால், சினி-க்கு அவா்கள் தகவல் அளித்தனா். சஜியைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.