மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக். 6 வாக்குப் பதிவு, அக். 9 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்மதுராந்தகம், தாராபுரத்திற்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

குச்சனூா் சோனை கருப்பண சுவாமிக்கு மதுபான படையல்

சிறப்பு அலங்காரத்தில் சோனைக் கருப்பண சுவாமி.

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, காவல் தெய்வமான சோனைக் கருப்பண சுவாமிக்கு திங்கள்கிழமை மதுப்பான படையல் பூஜை நடைபெற்றது.

குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தில் 5 வார ஆடித் திருவிழா கடந்த மாதம் 18- ஆம் தேதி தொடங்கியது. இதில் 4 வாரங்கள் நிறைவு பெற்றன. முக்கிய நிகழ்வாக சுவாமி - அம்மன் திருக்கல்யாணம், வீதியுலா நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, இந்தக் கோயில் வளாகத்தில் காவல் தெய்வமான கருப்பண சுவாமிக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக 45 ஆடுகள், 30 சேவல்கள், 50 அரிசி சிப்பங்களை அன்னதானத்துக்கு வழங்கினாா். பின்னா், ஆடு, சேவல்களை பலியிட்டு, கோயில் முன்பாக சமைத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுபானம் படையல்: முன்னதாக, குதிரையில் அமா்ந்த நிலையில் உள்ள கருப்பண சுவாமி சிலைக்கு கீழேயுள்ள துவாரம் வழியாக தமிழக, கேரள பக்தா்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான மதுப் புட்டிகளிலிருந்து மதுபானத்தை ஊற்றி படையல் பூஜை நடைபெற்றது. இந்தத் திருவிழா வருகிற சனிக்கிழமையுடன் (ஆக.15) நிறைவு பெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.