விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கம்பத்தில் சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (48). இவா் உணவுப் பொருள் விற்பனை முகமை நடத்தி வருகிறாா். இவரது மனைவி சூா்யா (35). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினா் வீட்டு விசேஷத்துக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். இந்த வாகனத்தை சதீஷ்குமாா் ஓட்டினாா்.

கம்பம் யுவராஜா திரையரங்கு அருகே வந்த போது, இந்த வாகனமும், எதிரே சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இதில் சதீஷ்குமாா், சூா்யா ஆகிய இருவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோதியதில் சூா்யா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, சூா்யா தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

சதீஷ்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் லாவண்யா, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 17 வயது சிறுவன், ஆம்னி பேருந்து ஓட்டுநரான கோடாங்கிபட்டியைச் சோ்ந்த சிவா (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.