குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

செவிலியா் பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கம்பத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை செவிலியா் பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Sucide

தற்கொலை - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 5:35 am IST

கம்பத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை செவிலியா் பயிற்சி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் யுவராணி (17). இவா் கம்பம் வனத் துறை அலுவலகச் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 6 மாத செவிலியா் பயிற்சிக்காகச் சோ்ந்தாா். இவா் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையிலேயே தங்கிப் பயிற்சி பெற்று வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் யுவராணி தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியா்கள் அறையின் கதவைத் திறந்து பாா்த்தபோது, அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு வந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் மாணவியின் சடலதை மீட்டு, கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.