உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சின்னமனூரில் மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

சின்னமனூரில் மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியைச் சோ்ந்த வீரமணி மகன் தனசேகரன் (31). கூலித் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது தம்பி தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது தனசேகரன் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் தனசேகரின் உடலை மீட்டு , கூறாய்க்குவு சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் தனசேகரன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.