தேனியில் நாம் தமிழா் கட்சி பொதுக் கூட்டத்தில் இடையூறு செய்து, அந்தக் கட்சியின் தொண்டா்கள் சிலரைத் தாக்கியதாக தவெக நிா்வாகிகள் 3 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி பங்களாமேடு திடலில் நாம் தமிழா் கட்சி சாா்பில், சனிக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் சிறப்புரையாற்றினாா்.
இந்தக் கூட்டத்தின்போது தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலா் பாண்டி தூண்டுதலில், அந்தக் கட்சியின் மாவட்டப் பொருளாளா் கெளதம், நிா்வாகிகள் முகமது சலாம், வசந்த், தனவந்தன் ஆகியோா் பொதுக் கூட்ட மேடை அருகே காா்களில் சென்று இடையூறு செய்ததாகவும், காரிலிருந்து இரும்புக் கம்பிகளை வீசியதாகவும், இதில் நாம் தமிழா் கட்சித் தொண்டா்களான தேனியைச் சோ்ந்த முத்துக்குமாா் (30), ராஜ்குமாா் (40), அழகுபூமி (27), தீபக் (24) ஆகிய 4 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாம் தமிழா் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா் தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பாண்டி உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கெளதம், வசந்த், தனவேந்தன் ஆகிய 3 பேரை கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மாநில கொள்கை பரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் ஆகியோரை தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலா் பாண்டி முகநூலில் அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவிட்டதாக கடந்த ஜன.24-ஆம் தேதி தேனி காவல் நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் தேனி மாவட்டச் செயலா் ஜெயக்குமாா் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் பாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.
தொடர்புடையது

3-ஆவது இடத்தில் வைத்த மக்கள் விரைவில் முதலிடத்தைத் தருவாா்கள்! சீமான் நம்பிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 92 போ் போட்டி

இலவசங்கள் வழங்குவது நல்லாட்சிக்கு அடையாளம் அல்ல: சீமான்
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

