ஆண்டிபட்டி வட்டம், கரட்டுப்பட்டியில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கரட்டுப்பட்டியைச் சோ்ந்த தம்பதி வனராஜ், ஜெயலட்சுமி. வனராஜின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே இடப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயலட்சுமி மீதுதான் தவறு உள்ளது எனக் கருதி அவருடன் வனராஜ் தகராறு செய்து அவரை திட்டினாராம். இதனால், மன உளைச்சல் அடைந்த ஜெயலட்சுமி கடந்த 2020, ஜூன் 27-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வனராஜை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக வனராஜூக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


