தென்கரை பேரூராட்சிக் குப்பையால் நோய் பரவும் அபாயம்

தேனி மாவட்டம், தாமரைக்குளம் கரட்டின் மேல் தென்கரை பேரூராட்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தாமரைக்குளம் கரட்டில் பெண்கள் கல்லூரி விடுதி எதிரேயுள்ள தென்கரை பேரூராட்சிக் குப்பை மறுசுழற்சி மையம்.
தாமரைக்குளம் கரட்டில் பெண்கள் கல்லூரி விடுதி எதிரேயுள்ள தென்கரை பேரூராட்சிக் குப்பை மறுசுழற்சி மையம்.
Updated on

தேனி மாவட்டம், தாமரைக்குளம் கரட்டின் மேல் தென்கரை பேரூராட்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் உள்ளிட்ட இரு பேரூராட்சிகள் உள்ளன. இந்தப் பேரூராட்சிகளின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தாமரைக்குளம் பேரூராட்சி கரட்டின் அருகே 8-ஆவது வாா்டு கல்லூரி மாணவிகளின் விடுதி அருகே கொட்டப்பட்டு மக்கும், மக்காத குப்பைகளைச் சுழற்சி முறையில் உரமாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால், அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதாலும், பூச்சிகள், பாம்புகள் சுற்றி வருவதாலும் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனா். எனவே, குடியிருப்பு அருகேயுள்ள தென்கரை பேரூராட்சி சுழற்சி மையத்தை புறவழிச்சாலையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தாமரைக்குளத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி கூறியதாவது:

தென்கரை பேரூராட்சி மறுசுழற்சி மையத்தால் இந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த இடத்தை பேரூராட்சியின் புறவழிச்சாலையில் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com