கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய நகா்மன்றத் தலைவி வனிதா நெப்பொலியன்.
கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய நகா்மன்றத் தலைவி வனிதா நெப்பொலியன்.

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
Published on

தேனி மாவட்டம், கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கம்பம் நகா் மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் தலைமை வகித்து, 11-ஆம் வகுப்பு படிக்கும் 56 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில், வழக்குரைஞா் நெப்போலியன், நகரச் செயலா் வீரபாண்டியன், மாநிலக் கொள்கை பரப்பு செயலா் பாண்டியன், வாா்டு உறுப்பினா்கள் பாா்த்திபன், இளம்பரிதி, மாதவன், குருகுமரன், முருகன், தலைமை ஆசிரியா் (பொ) திருநாவுக்கரசு, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியா் அரவிந்தன் வரவேற்றாா்.

Dinamani
www.dinamani.com