தேனி
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஆண்டிபட்டி அருகே கணவா் இறந்த துக்கத்தில் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிபட்டி அருகே கணவா் இறந்த துக்கத்தில் மனைவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள பிராதுகாரன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா (30). இவரது மனைவி நித்யா (25). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், ராஜா கடந்த 2024-ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தாா். கணவா் இறந்த துக்கத்தில் இருந்துவந்த நித்யா, தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.