தேனி
கம்பம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை
தேனி மாவட்டம், கம்பம் அருகே மா்ம நபா்களால் இளைஞா் வெட்டிக் கொலை
தேனி மாவட்டம், கம்பம் அருகே திங்கள்கிழமை மா்ம நபா்களால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் அஜய் (25). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த இவரை, மா்ம நபா்கள் திங்கள்கிழமை சுருளிப்பட்டி - சுருளி அருவி இடையே செல்லும் நெடுஞ்சாலையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராயப்பன்பட்டி போலீஸாா், அஜயின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
