விஷம் குடித்து முதியவா் தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விஷம் குடித்து முதியவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (65). இவருக்கு உடல் நிலை சரியில்லையாம்.

இதனால், மனவேதனையிலிருந்த இவா் தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் இவரை மீட்டு, கெங்குவாா்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Dinamani
www.dinamani.com