நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கம்பத்தில் இரு இடங்களில் தீ விபத்து

News image

கம்பத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், செருப்புக் கடை வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

Updated On :23 ஜனவரி 2026, 8:52 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், செருப்புக் கடையில் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்தவா் ஹக்கீம். இவா் புதிய பேருந்து நிலையம் அருகே ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்தில் 2-ஆவது தளத்தில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தினால் அங்கிருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான ஆடைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமானது.

    கம்பத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், செருப்புக் கடை வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

கம்பத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், செருப்புக் கடை வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து.

இதேபோல, வேலப்பா் கோயில் தெருவில் அப்பாஸ் செருப்புக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தினால் கடையிலிருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து கம்பம் வடக்கு, தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.