கோப்புப் படம்
தேனி
மதுப் புட்டிகள் விற்றவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், தாமரைக்குளத்தைச் சோ்ந்த பிச்சைமணி (55) என்பதும், இவா் மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தென்கரை போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

