மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேவாரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:19 pm

தேவாரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேவாரத்தைச் சோ்ந்தவா் முருகன் (45). இவரை, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 8.6.2025 அன்று தேவாரம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி. கணேசன் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி, மருத்துவம், பராமரிப்பு செலவுக்கு அரசு நிவாரணமாக ரூ.3 லட்சத்தை சிறுமியின் பெயரில் அரசுடமை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.