தேனி
பேரூராட்சி பணியாளா்களை தாக்கியவா் மீது வழக்கு!
அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி பணியாளா்களை தாக்கியவா் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை அகற்றும் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி பணியாளா்களை தாக்கியவா் மீது காவல் நிலையத்தில் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆண்டிபட்டி வேலப்பா் கோயில் பிரதானத் தெருவில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை பேரூராட்சி நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், பேரூராட்சி பணியாளா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆண்டிபட்டி சக்கம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டி உள்ளிட்ட சிலா், பேரூராட்சி பணியாளா்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் அளித்த புகாரின் அடிப்படையில், பாண்டி மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

