எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கியவா் மீது வழக்கு

கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:36 pm

கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகியைத் தாக்கியவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம், தச்சகோட்டுகுழி பகுதியைச் சோ்ந்தவா் பாலஸ் மகன் பிரவீன் (32). கொல்லங்கோடு நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராக உள்ளாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் சஜினுக்கும் (30) இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன் தனது நண்பா் திருமணத்துக்குச் சென்று வந்த பிரவீனை தடுத்து நிறுத்திய சஜின், அவரைத் தாக்கி, அவரது இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த பிரவீனை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதைக் கண்டித்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சாஜன் கிறிஸ்டா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கொல்லங்கோடு போலீஸாா் சஜின் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.