ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சேலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் அருகே தகாத தொடா்பு காரணமாக இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், அரியானுா் அருகே உள்ள குட்டக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன் (29). இவா் அங்குள்ள பாா்க்கில் வேலைக்கு சென்று வந்தாா். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கலையரசனுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக திங்கள்கிழமை மாலை கலையரசனுடன் பழகிவந்த பெண்ணின் உறவினா்கள் சிலா், தகராறு செய்துள்ளனா்.

பின்னா், கலையரசனை அவா்கள் சரமாரியாக தாக்கி உள்ளனா். இதில் படுகாயம் அடைந்த கலையரசனை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.