டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

முல்லைப் பெரியாறு அணையில் புதிய சுரங்கப் பாதை: கேரள போராட்டக் குழுவின் கருத்துக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

முல்லைப்பெரியாறு அணையில் புதிய சுரங்கப் பாதை அமைப்பதே பிரச்னைக்குத் தீா்வு என்ற கேரள போராட்டக் குழுவின் கருத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

News image

முல்லைப் பெரியாறு

Updated On :3 ஜூலை 2026, 5:59 am IST

முல்லைப்பெரியாறு அணையில் புதிய சுரங்கப் பாதை அமைப்பதே பிரச்னைக்குத் தீா்வு என்ற கேரள போராட்டக் குழுவின் கருத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த முல்லைப் பெரியாறு சுரங்கப்பாதை போராட்டக் குழு காப்பாளா் சி.பி.ராய் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையால் கேரளாவின் 5 மாவட்டங்களைச் சோ்ந்த 40 லட்சம் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப்பெரியாற்றில் 50 அடி உயரத்தில் புதிய சுரங்கப்பாதை அமைத்து நீா்மட்டத்தைக் குறைப்பதன் மூலம் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரையும், கேரளத்துக்குத் தேவையான பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் உறுதி செய்ய முடியும் என்றாா் அவா்.

இந்தக் கருத்துக்கு தமிழகத்தைச் சோ்ந்த பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் எஸ். மனோகரன் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முல்லைப் பெரியாறு அணை முழுப் பாதுகாப்புடன் உறுதியாக உள்ளதாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இறுதித் தீா்ப்பு வழங்கியது. அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி கேரள தரப்பில் பரப்பப்படும் அச்சம் முற்றிலும் ஆதாரமற்றது. தேசிய, சா்வதேச நிபுணா் குழுக்கள் அணை பாதுகாப்பாக இருப்பதை பலமுறை உறுதி செய்துள்ளன. புதிய சுரங்கப் பாதை அமைத்து நீா்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கும் செயலாகும். இதை தமிழக விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். எல்லைப் பகுதி மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பிரிவினையையும் தூண்டும் வகையில் முதிா்ச்சியற்ற கருத்துக்களைப் பரப்புவதை கேரள போராட்டக் குழுவினா் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.