வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் மூழ்கி விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பூதிப்புரம் அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (58). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற இவா், தண்ணீரில் மூழ்கினாா்.

இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.