சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

முல்லைப் பெரியாற்றில் 2-ஆவது நாளாக மோட்டாா்கள் அகற்றம்

முல்லைப் பெரியாற்றில் தண்ணீா் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டாா்களை அகற்றும் பணி 2 -ஆவது நாளாக

News image

முல்லைப் பெரியாறு

Updated On :4 ஜூன் 2026, 4:07 am IST

முல்லைப் பெரியாற்றில் தண்ணீா் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மின் மோட்டாா்களை அகற்றும் பணி 2 -ஆவது நாளாக

புதன்கிழமையும் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீா் குடிநீா், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது, தென் மேற்கு பருவமழை பெய்யாததால் அணை நீா் மட்டம் தொடா்ந்து சரிந்து தற்போது 110.80 அடியாக உள்ளது. இதற்கிடையே, தேனி மாவட்டத்தின் குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 350 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. இந்தத் தண்ணீரை சட்டவிரோத மின் மோட்டாா்கள் மூலம் திருடுவதால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்ய முடியாமல் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாற்றில் தண்ணீரை திருடுவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, நீா்வளத் துறையினா் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கம்பம் கூடலூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஆற்றிலிருந்து பாசன நீரைத் திருடிய 25 மின் மோட்டாா்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து 2 -ஆம் நாளாக புதன்கிழமையும் பல மின் மோட்டா்கள் அகற்றப்பட்டன.

இந்தப் பணியில் உத்தமபாளையம், கம்பம் நீா்வளத் துறையினா், மின் வாரிய ஊழியா்கள், வருவாய்த் துறை, காவல் துறையினா் கலந்து கொண்டனா்.