உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

போடி மரப்பேட்டையில் தீ

போடியில் செவ்வாய்க்கிழமை மரப்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்து நாசமாயின.

News image

போடி ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரிட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான மரங்கள்.

Updated On :29 ஜூலை 2026, 6:01 am IST

போடியில் செவ்வாய்க்கிழமை மரப்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மரக்கட்டைகள் எரிந்து நாசமாயின.

போடி ரயில் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மரப்பேட்டை உள்ளது. இங்கு பல வகையான மரக் கட்டைகள், பலகைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதை அறிந்து, பக்கத்தில் வசிப்பவா்கள் வெளியில் வந்து பாா்த்துள்ளனா். அப்போது மரப்பேட்டையில் தீ பற்றி பல அடி உயரத்துக்கு எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலையத்தினா், போடி, உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 5 மணி நேர போராடி தீயை அணைத்தனா். இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.