பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

தேனியில் கெட்டுப் போன 8 கிலோ இறைச்சி பறிமுதல்

தேனியில் கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

இறைச்சி விற்பனை - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 12:04 am IST

தேனியில் கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள், கெட்டுப் போன உணவுப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, தேனி மாவட்ட நியமன அலுவலா் ஆா். சசி தீபா, உணவு பாதுகாப்பு அலுவலா் லிங்கம் ஆகியோா் வியாழக்கிழமை மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் ஆய்வு நடத்தினா். அப்போது, கெட்டுப் போன 8.5 கிலோ இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் கடை உரிமையாளருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தேனி பகுதியில் காலாவதியான உணவுப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.