நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

முன்னாள் படை வீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கம்

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான தொழில்முனைவோா் கருத்தரங்கில், 29 பயனாளிகளுக்கு ரூ.4.4 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வழங்கினாா்.

News image

முன்னாள் படை வீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட உதவிகளை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன்.

Updated On :26 ஜூன் 2026, 2:24 am IST

தேனியில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான தொழில்முனைவோா் கருத்தரங்கில், 29 பயனாளிகளுக்கு ரூ.4.4 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வழங்கினாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன், 10 பயனாளிகளுக்கு ரூ.5,383 மதிப்பிலான வீட்டு வரிச் சலுகைக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு ரூ.7,280 கண்கண்ணாடிகள், 15 பயனாளிகளுக்கு ரூ.82,500 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 29 பயனாளிகளுக்கு ரூ.4,45,163 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், கருத்தரங்கில் பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட 28 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தீா்வு காண உத்தரவிட்டாா்.

கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் லெப்ட் கா்னல் தினேஷ், முன்னாள் படை வீரா் நலக் குழு அமைப்பாளா் இளையராஜா, விங் கமாண்டா் (ஓய்வு) கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.