தேனி மாவட்டத்தில் நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் இரா. வைத்திநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பெரியகுளம் வடகரையில் இணையும் கல்லாறு- வராகநதி பகுதியிலிருந்து சந்தியாநகா் வரை தூா்வாரும் பணியையும், சோத்துப்பாறை அணையில் நீா்வரத்து, நீா் இருப்பையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தேனி- அல்லிநகரம் நகராட்சி நீா்வளத் துறையின் சாா்பில் மீறு சமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடியில் கண்மாயை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் சு. சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் அன்பரசன், சாலமோன் கிறிஸ்துதாஸ், உதவிப் பொறியாளா்கள் மனோஜ்குமாா், அரவிந்த், வட்டாட்சியா்கள் சதீஸ்குமாா் (தேனி), மருதுபாண்டி (பெரியகுளம்) உள்பட பலா் இருந்தனா்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள்: தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஒசூரில் சாலை, மேம்பாலப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



