‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மேலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

தும்பைபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தொகுப்பு பால் குளிா்விப்பான் மையத்தை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன் அரசு அலுவலா்கள்.

Updated On :23 மே 2026, 3:45 am IST

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலூா் வட்டம், பள்ளப்பட்டி கிராம பாலாற்றின் குறுக்கே ஒருங்கிணைந்த நீா்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.7.70 கோடியில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்தத் தடுப்பணை மூலம் பள்ளப்பட்டி கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளின் நிலத்தடி நீா் மட்டம் உயரும்.

மேலும், கிராமங்களின் குடிநீா்த் தேவையும் நிறைவு செய்யப்படும். 55 கிணறுகள் நீா் செறிவூட்டுதலால் சுமாா் 569.93 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.

மேலும், தடுப்பணையின் கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில், 1,000 புங்கன் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கவும், தடுப்பணையில் குளிப்பது, ஆபத்தான பகுதிகளில் செல்லக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை தகவல் பலகைகளை பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கருங்காலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், புதிய தேநீா்க் கடை தொழில் தொடங்குவதற்காக ரூ.20 ஆயிரம் கடன் உதவிக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கினாா். பின்னா், பேச்சியம்மன் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த மகேஸ்வரி ரூ.50 ஆயிரம் கடன் உதவி பெற்று சித்திரத் தையல் (எம்பிராய்டரி) தொழில் செய்து வருவதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.1.23 கோடியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைக் கட்டடப் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

தும்பைபட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாதவ பெருமாள் மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி சதீஷுக்கு பல்வேறு தவணைகளாக ரூ. 1.25 லட்சம், 50 ஆயிரம், 30 ஆயிரம் கடன் உதவி பெற்று ஆடு வளா்ப்பு தொழில் செய்து வருவதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் சாா்பிலான தொகுப்பு பால் குளிா்விப்பான் மையத்தை ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தும்பைபட்டி தொகுப்பு பால் குளிா்விப்பான் மையத்தில் பால் சேகரிப்பு, தர பரிசோதனை, குளிா்விப்பு வசதிகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், தினசரி பால் வரத்து, பயன்பெறும் பால் உற்பத்தியாளா்களின் எண்ணிக்கை, பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு வழங்கப்படும் தொகை, கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைப் பராமரிப்பு நடவடிக்கைகள், மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மேலூா் (நெடுஞ்சாலை) உள்கோட்டத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.24 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராமநாதபுரம்-நயினாா்கோவில்-ஆண்டகுடி-இளையான்குடி-சிவகங்கை-மேலூா் சாலை விரிவாக்கம், பலப்படுத்தும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.